நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கமல்ஹாசன் எம்.பி. சென்னையில் நடந்த ஒரு விழாவில் சனாதனம் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட துணை நடிகரான ரவி என்பவர் “கமல்ஹாசனின் சங்கை அறுப்போம்” என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை கண்டித்து மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் துணைத்தலைவர் மௌரியா மற்றும் நிர்வாகிகள் கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ், மயில்வாகனன், அர்ஜுனர் ஆகியோர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று முறைப்பாடளித்துள்ளனர்.
அதில் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
