நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் தரப்பினர்களில் மிக முக்கியமானவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள். இவர்களின் ஊதிய பிரச்சினைக்கு தீர்வு இன்று வரை கிடைக்கப்பெறவேயில்லை.
பெருந்தோட்ட மக்களின் ஊதியத்தை அரசாங்கம் ஒரு பொழுதுபோக்காக மாற்றியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரான வேலுசாமி இராதாகிருஷ்ணன் நேற்று நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கான நாளாந்த அடிப்படை ஊதியமாக ரூ.1,350 நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி இவர்களுக்கான ஊதிய அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் நடாத்திய போதிலும் இன்று வரை எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
