பொரளை – சஹஸ்புர பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
உந்துருளியில் வந்த இருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
