தமிழ் சினிமாவினுடைய நகைச்சுவை நடிகரான நடிகர் மதன்பாபு இன்றைய தினம் அவரது 71 வது வயதில் காலமானார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த மதன்பாபு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்னையில் காலமானார்.
கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட மதன்பாபு ஆரம்பத்தில் கிட்டாரிஸ்ட்டாக இருந்துள்ளதுடன், தூர்தர்ஷன் என்ற தொலைக்காட்சியில் இசைக்கலைஞராக பணியாற்றியுள்ளார்.
இசையமைப்பாளர், காமெடி ஷோ நடுவர், குணச்சித்திர நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
இந்நிலையில் அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
