ரெட் கிரிஸ் சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை முதல் சிக்கித் தவிக்கும் மூன்று துளையிடும் தொழிலாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கெவின் கூம்ப்ஸ், டேரியன் மடுக், மற்றும் ஜெஸ்ஸி சுபட்டி ஆகியோரே சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் ஆவர்.
இவர்களது குடும்பங்களின் அனுமதியுடன் இந்த தகவலை, இத்தொழிலாளர்களின் தொழில்வழங்குநரான Hy-Tech Drilling நிறுவனம் வெளியிட்டது.
அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும், தேவையான காற்று மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இருப்பதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
சுரங்கச் செயல்பாட்டாளரான நியூமோன்ட் கார்ப்பரேஷனுடன் (Newmont Corp.) இணைந்து மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் ஹாய்-டெக் டிரில்லிங் தெரிவித்துள்ளது.
நியூமோன்ட் நிறுவனத்தின் உலகளாவிய பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் பெர்னார்ட் வெஸ்ஸல்ஸ், சுரங்கத் தொழிலாளர்களுக்கு இயற்கையான காற்று கிடைப்பதாகவும், அவர்கள் தங்கியுள்ள தங்குமிடம் வரை பாதுகாப்பான பாதை வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
