நெடுந்தீவு பகுதியில் நேற்ற்றைய தினம் மாலை பாழடைந்த கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5 அடி நீளமுடைய முதலை, இன்று கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
முதலில், அது நெடுந்தீவு வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடற்படையின் உதவியுடன் கடல் மூலம் குறிகாட்டுவனுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வாகனத்தில் கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
முதலை கண்டுபிடிக்கப்பட்ட இடமான வெட்டுக்களிப் பகுதியில் உள்ள கிணறு நீர் வற்றிய நிலையிலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
