தென் கியூபெக் பகுதியை உக்கிரமான இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் கூடிய புயல் நேற்றைய தினம் தாக்கியுள்ளது. இதன் விளைவாக, கியூபெக் நகரப் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 75 மில்லிமீட்டர் வரை கனமழைபெய்தது.
இந்த திடீர் மழை வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, வீதிகளை மூழ்கடித்ததுடன், சுமார் 15 பேரை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது.
இந்த கடும் மழையே வெள்ளப்பெருக்கிற்கு வழிவகுத்தது என, கனடாவின் சுற்றுச்சூழல் துறை உறுதிப்படுத்தியுள்ளது. கியூபெக் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டத்தில், அதிகாரிகள் பலவீதிகளை மூட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்.சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான கேப்-பிளாங்க் படிக்கட்டும் மூடப்பட்டது.
கியூபெக் நகரப் பகுதியில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்குடன், தென் கியூபெக்கின் பிற பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய இடி புயல்கள்
தாக்கின. இந்த பலத்த காற்றினால் மரங்கள் சேதமடைந்தன, மேலும் பரவலான மின் தடங்கல்கள் ஏற்பட்டன.
குறிப்பாக, மான்டேரிஜி (Montérégie) பிராந்தியம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
