பிரான்ஸில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான சேவைகளை 40 சதவீதம் அளவுக்கு குறைக்கும்படி பிரான்ஸ் விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ரியான் எயார் 170 விமானங்களை இரத்துசெய்வதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரியான் எயார் விமான போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதனால் இங்கிலாந்து, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்லும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.