Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் விடுத்துள்ள அறிக்கை!

ஜூலை 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காஸாவில் இடம்பெறும் இனப்படுகொலை காரணமாக சர்வதேச நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனபகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் அந்த நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு பிரான்செஸ்கா அல்பனீஸ் அளித்த அறிக்கை, காஸாவில் இஸ்ரேலின் 21 மாத தாக்குதலில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களின் ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகிறது.

காஸாவில் முற்றிலுமாக சிதைந்த நிலையிலும், இஸ்ரேலின் இனப்படுகொலை பெருநிறுவனங்களுக்கு இலாபகரமானது என்பதால் தொடர்கிறது என பிரான்செஸ்கா அறிக்கை விளக்குகிறது .

‘ஆக்கிரமிப்புப் பொருளாதாரத்திலிருந்து இனப்படுகொலைப் பொருளாதாரம் வரை’ என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, காஸா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீனப் பிரதேசங்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் கனரக இயந்திரங்களை வழங்குவதில் சர்வதேச நிறுவன பங்காளிகளின் ஈடுபாட்டையும், பொருட்களை விற்பனை செய்யும் விவசாய நிறுவனங்களையும், போருக்கு நிதியளிக்கும் முதலீட்டு நிறுவனங்களையும் அறிக்கை குறிப்பிடுகிறது

அரசியல் தலைவர்களும் அரசாங்கங்களும் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் அதே வேளையில், ஏராளமான பெருநிறுவனங்கள் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை ஆகியவற்றால் இலாபம் ஈட்டியுள்ளன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

2022 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிரதேசங்கள் குறித்த சிறப்பு அறிக்கையாளராக இருக்கும் இத்தாலிய சட்ட அறிஞரான பிரான்செஸ்கா அல்பானீஸ், காஸாவில் இஸ்ரேலிய தாக்குதலை ஒரு இனப்படுகொலை’ என்று ஜனவரி 2024 இல் முதன்முதலில் உறுதிப்படுத்தினார்.

இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது

முந்தைய செய்தி ஐரோப்பாவை உலுக்கிய வெப்பம் – ஸ்பெயினில் நால்வர் பலி
அடுத்த செய்தி பிரான்ஸில் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பற்றி எரியும் நேபாள நீதிமன்றம்!

செப்டம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்உலகம்

யுக்ரைனுடனான போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி இணக்கம்!

மார்ச் 14, 2025
உலகம்

நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரைன் பயன்படுத்துவதற்கு ஜோ பைடன் அனுமதி!

நவம்பர் 18, 2024
உலகம்

ரஷ்ய எண்ணெய் கப்பலை பின்தொடரும் அமெரிக்க கடற்படை

ஜனவரி 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?