டொராண்டோ நகர சபையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில், புதிய “தலைமை மீள்தன்மை அதிகாரி” (Chief Resiliency Officer) பதவியை உருவாக்குவது குறித்து ஆராய முடிவு செய்துள்ளது.
டொராண்டோ நகரில், அண்மையில் ஏற்பட்ட கடும் வெப்ப அலைகள் உட்பட, தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறான சவால்களை திறம்பட எதிர்கொள்ள ஒரு பிரத்தியேக அதிகாரி நியமிக்கப்படுவது நகரத்தின் தயார்நிலையை மேம்படுத்தும் என்று கருதப்படுகின்றது.
தீவிர வானிலை சூழ்நிலைகளை நகரம் சிறப்பாகக் கையாள உதவும் வகையிலேயே, இந்த பதவி உருவாக்கப்படவுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட கடும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, நகரத்தின் தற்போதைய வெப்ப நிவாரணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யவும் சபை வாக்களித்துள்ளது.
தலைமை மீள்தன்மை அதிகாரி எனும் பதவி பற்றிய பரிந்துரைகளையும், வெப்ப உத்தி குறித்த அறிக்கையையும் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் நகரசபையின் அதிகாரிகள், சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.