பிரிட்டிஷ் கொலம்பியாவின் சரே நகரில் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை இரவு 7:40 மணியளவில் 129 வீதியின் 10800 பிளாக் அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக சரே காவல்துறை சேவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் படுகாயமடைந்த ஒருவரைக் கண்டெடுத்தனர்.
அந்த நபருக்கான உயிர்காக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.
என்றாலும், இந்த சம்பவம் “தற்செயலானதாகத் தெரியவில்லை” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது பாதிக்கப்பட்டவர் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
இந்தச் சம்பவம் இந்த ஆண்டு சரேயில் பதிவான நான்காவது கொலைச் சம்பவமாகும்.
ஒருங்கிணைந்த கொலை விசாரணை குழு (Integrated Homicide Investigation Team – IHIT) இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டுள்ளது.
