Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வெட்டப்பட்ட வீதிஅவதியுறும் விவசாயிகள்!

ஜூன் 19, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கு சொந்தமான பூதன்வயலில் இருந்து மதவளசிங்கன் குளம் செல்லும் வீதியில் பிரதான பாலம் ஒன்று மிக நீண்ட காலமாக சீர் செய்யப்பட வேண்டிய தேவையில் காணப்பட்டுள்ளது

குறித்த பாலத்தினை அமைத்து தருமாறு மக்கள் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக தற்போது குறித்த பாலம் அமைக்கும் பணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது

குறித்த பகுதி அமைப்பினருடன் கலந்துரையாடாமல் திடீரென பால வேலைக்காக பாதையை முற்றுமுழுதாக வெட்டி பாலம் அமைக்கின்ற பணிகள் செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில் அருகிலே மாற்றுப் பாதை ஒன்றை அமைக்காமல் மக்களுடைய போக்குவரத்து முற்றாக தடைப்படக்கூடிய வகையில் மோட்டார் சைக்கிள் மட்டும் செல்லக்கூடிய ஒரு சிறிய பாதையை மட்டும் போட்டுவிட்டு குறித்த பாலம் அமைக்கும் பணி இடம்பெறுகின்றது

இந்நிலையில் குறித்த பகுதியூடாக விவசாய நடவடிக்கைகளுக்கு சென்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக கச்சான் காணிகளுக்கு செல்கின்ற மக்கள் வயல் நிலங்களுக்கு செல்கின்ற மக்கள் தங்களுடைய வயல் நிலங்கள் மற்றும் கச்சான் காணிகளுக்கான மூலப் பொருட்கள் அல்லது முடிவு பொருட்களை கொண்டு செல்ல அல்லது கொண்டுவர முடியாத இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு கேட்ட போது அதற்குரிய மாற்றுப் பாதை அமைத்து தர முடியாது என தெரிவித்திருக்கிறதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் எனவே தமக்கு உடனடியாக அந்த பாலம் அமைக்கின்ற இடத்திலே அதற்கு அருகாக மாற்றுப்பாதை ஒன்றை அமைத்து தங்களுடைய நெல்லுகளை வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கும் தங்களுடைய காணிகளுக்கு செல்வதற்கும் ஏற்ற வகையில் உளவு இயந்திரம் செல்லக்கூடிய வகையில் பாதை ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களுடைய விவசாய உள்ளீடுகளை உரிய வகையிலே தனது வீடுகளுக்கு கொண்டுவர முடியாமல் அந்தரிப்பதாகவும் எனவே இதற்குரிய அதிகாரிகள் உடனடியாக இதற்குரிய பாதையை அமைத்து தருமாறும் தங்களுக்கு அந்த இடத்தில் பாலம் அமைக்கப்பட வேண்டியது மிக முக்கியமானது எனவும் ஆனால் அந்த பாலம் அமைக்கின்ற பணியினால் தங்களுடைய விவசாய உற்பத்திகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் பாலத்தை அமைக்குமாறும் ஆனால் அதற்கு அருகிலே மக்கள் சென்றுவரக்கூடிய பாதையை அமைத்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குறிப்பாக பாதைகளில் கட்டுமான பணிகள் செய்கின்ற போது அதற்கு மாற்று பாதையை ஏற்பாடு செய்ய வேண்டியது அந்த பாதை கட்டுமானம் செய்கின்றவர்களுடைய பொறுப்பாக காணப்படுகின்ற நிலைமையில் அவ்வாறு செய்யப்படாமல் இந்த வேலை ஏன் செய்யப்படுகிறது என்பது தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்

முந்தைய செய்தி மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பு முயற்சி!
அடுத்த செய்தி யாழில் கஞ்சா போதைவஸ்து மாவாவுடன் இளைஞன் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நிதியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்

ஜனவரி 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிசூடு

ஜனவரி 17, 2026
இலங்கை

நிஷாந்த உலுகேதென்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

செப்டம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனேடிய அரசின் முக்கியக் கூட்டங்களில் பழங்குடி சமூகத் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டதால், கடும் அதிருப்தி!

ஜூன் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?