Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். 25 ஆயிரம் ரூபாயை கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

டிசம்பர் 7, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வெள்ள நிவாரண கொடுப்பனவு விடயத்தில் தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவருக்கு வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தாலும், அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 25 000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலரால் , பிரதேச செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த அக் கடிதத்தில் கூறியுள்ளதாவது,

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினுடைய பேரிடர் சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட வீட்டை வசிப்பதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கும், துப்பரவுப்பணிகளை மேற்கொள்வதற்கும், வீட்டு உபகரணங்களை மீட்டெடுப்பதற்கும், சமூக பொருளாதார அதிர்ச்சிகளை நிர்வகிப்பதற்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் ரூபா 25 ஆயிரம் உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

அந்த வகையில், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினுடைய 05ஆம் திகதி கடிதத்தில் முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதி சேதமடைந்த வீடுகள், வீடுகளுக்கு சேதம் ஏற்படாவிட்டாலும் சிறிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், உதவித்தொகையினை பெறுவதற்கு தகுதியானது என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தருக்கு சரியான தெளிவுபடுத்தலை வழங்க வேண்டியது பிரதேச செயலரின் கடமையாகும்.

இவ்வாறான வெள்ள அனர்த்த நிலைமைகளின் போது அனைத்து கிராம மட்ட அலுவலர்களும் நேரடியாக பிரிவிற்கு சென்று தரவுகளை பெற்றுக்கொள்வதனை பிரதேச செயலர் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

படிவத்தினை உரிய முறையில் பூர்த்தி செய்து உறுதிப்படுத்திய வகையில் மேற்படி கொடுப்பனவினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவு நிவாரணம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவிற்கு தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற கடமைப்பட்டிருப்பதனால் இவ்விடயங்களில் தனிப்பட்ட கவனமெடுத்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலினை இற்றைப்படுத்தி உறுதி செய்து கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் தமிழ் மொழியில் காட்சிப்படுத்தி அதன் மென் பிரதியினை (Soft copy) மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627ஆக உயர்வு!
அடுத்த செய்தி அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

யாழில் 17 சபைகளையும் கைப்பற்றுவோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

மார்ச் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இரத்தக்கறைகளுடன் சடலம் மீட்பு! பொலிசார் பலகோணத்தில் விசாரணை!

ஜூன் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பெரிய வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது

அக்டோபர் 16, 2025
இலங்கை

மன்னார் நகர எல்லைக்குள் கடைகள் ஏல விற்பனை – டானியல் வசந்தன்

டிசம்பர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?