இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாள் நிறைவில் பங்களாதேஷ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 484 ஓட்டங்களைப் பெற்றது
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதனடிப்படையில் பங்களாதேஷ் அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ஒட்டங்களையும், முஸ்பிகூர் ரஹீம் 163 ஓட்டங்களையும், லிட்டன் தாஷ் 90 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
இன்றைய நாளில் சீரற்ற காலநிலை காரணமாகப் போட்டியை முன்னதாகவே நிறைவு செய்ய நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.