முல்லைத்தீவு, உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூக்களை பறிக்கச் சென்ற இருவர் தோணி கவிழ்ந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது தோணியில் இருந்த இருவரும் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 10 வயதுடைய சி.பிரணவன் என்ற சிறுவனும் 25 வயதுடைய இ.நிஷாந்தன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.