வவுனியா மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய இசையுடன் நுங்குத் திருவிழா இன்று இடம் பெற்றிருந்தது.
இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்தி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும் கலை நிலா கலையகத்தினால் இயற்கை உரத்தின் முக்கியதுவத்தை வலியுறுத்தி நாடக ஆற்றுகையும் இடம் பெற்றிருந்தது.
சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழீவிருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் கிராம சேவகர்கள் பொதுமக்கள் மற்றும் பெரும்பாலான இளைஞர்கள் யுவதிகள் எனப் பலரும் கலந்துக் கொண்டு நுங்குகளை பருகி மகிழ்ந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.