யாழ்ப்பாணத்தில் ஆவா ரௌடிக்கும்பலை உருவாக்கியவர்களில் ஒருவனான நல்லலிங்கம் பிரசன்னாவை, குற்றவழக்கில் பிரான்ஸூக்கு நாடு கடத்த கனடாவின் ஒன்றாரியோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையில் வாள்வெட்டு குற்றங்களில் ஈடுபட்ட ரௌடி பிரசன்னா, பின்னர் இலங்கையை விட்டு தப்பியோடி பிரான்ஸில் தஞ்சம் புகுந்தார்.
அங்கு சென்றும் வாள்வெட்டு குழுவை உருவாக்கி, மற்றொரு கும்பலை சேர்ந்தவர்களை வெட்டிய குற்றத்திலேயே நாடு கடத்தப்படவுள்ளார்.
பிரான்ஸில் வாள்வெட்டு குற்றத்தில் பொலிசாரால் தேடப்பட்டதும், ரௌடி பிரசன்னா கனடாவுக்கு தப்பிச் சென்றார்.
இந்நிலையில் அவர் சர்வதேச பொலிஸார் மூலம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
டொராண்டோ தெற்கு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரசன்னா, கனடாவின் நீதி அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில், 30 நாட்களுக்குப் பிறகு பிரான்ஸிடம் ஒப்படைக்கப்படுவார்.
