கனடா எப்போதும் விற்பனைக்கு இல்லை என்று கனடாவின் பிரதமர் மார்க் கார்னி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போதே இக்கருத்தை கனடாவின் பிரதமர்
வெளிப்படுத்தியுள்ளார்.
கனடாவை 51வது மாநிலமாக இணைப்பது குறித்த அமெரிக்க
ஜனாதிபதியின் கருத்தை, மார்க் கார்னி மறுத்துரைத்தார்.
இரு தலைவர்களும் முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்து பேசிய இந்த கூட்டத்தில், வரிகள் மற்றும் கனடா-அமெரிக்க உறவுகள் முதலானவை முக்கிய பேசுபொருட்களாக இருந்தன.
இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது அமுலில் இருக்கும் தற்போதைய வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடல் எதிர்காலத்தில் விரிவான பேச்சுவார்த்தைக்கு
அடிப்படையாக இருக்கும் என்று கார்னி குறிப்பிட்டார்.
கனடா மீதான தற்போதைய வரிகளை நீக்குவது தொடர்பில் மார்க் கார்னி தன்னை சமாதானப்படுத்த முடியாது என்று டிரம்ப் கூறினார்.
அதேவேளை இந்த கலந்துரையாடல் மிகவும் நட்பு ரீதியாக அமைந்திருந்தது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
