கனடாவில் அடுத்த 4 ஆண்டுகள் லிபரல் கட்சி ஆட்சி நிலவவுள்ளமை உறுதியாகியுள்ளது.
கனடாவின் புதிய பிரதமராக லிபரல் கட்சித் தலைவர் மார்க் கார்னி மீண்டும் பதவியேற்கவுள்ளார்.
கனேடியர்களுக்கு வாக்குறுதியளித்தவற்றை வழங்குவதற்காகப் பணியாற்றவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலவரப்படி, லிபரல் கட்சி கனடாவின் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.
நடைபெற்ற இந்த பொதுத்தேர்தல் லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகளுக்கு இடையேயான இருமுனைப் போட்டியாக அமைந்தமை அவதானிக்கப்பட்டது.