லிபரல் கட்சித் தலைவர் மார்க் கார்னி, முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து மாறுபட்ட அரசியல்வாதியாக உள்ளார் என, பெரும்பாலான கனடியர்கள் கருதுவதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அண்மையில் இடம்பெற்ற அரசியல் தலைவர்களின் தொலைக்காட்சி விவாதத்தின்போது, மார்க் கார்னி “ஜஸ்டினைப் போலவே” இருப்பதாக, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே, திரும்பத் திரும்பக் குற்றம் சாட்டினார்.
ட்ரூடோ செல்வாக்கற்றவர் என பரவலாக கருதப்படுவதால், மார்க் கார்னியை ட்ரூடோவுடன் இணைத்துக் காட்டுவதில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வியூகம் கவனம் செலுத்துகிறது.
இதன் மூலம் மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தி நிலையை, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே பொய்லிவ்ரேயின் நோக்கம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.