கனடாவின் பொதுத் தேர்தலில் பென்சிலால் புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுகளில், வாக்குகள் மாற்றப்படலாம் என்ற வதந்தி தவறானது என, கனேடிய தேர்தல்கள்
திணைக்களம் அறிவித்துள்ளது.
பென்சில்களால் புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் பாதுகாப்பாகப் பேணப்படும் என்றும் அவை நம்பகமானவை என்றும் தேர்தல் அதிகாரிகள், கனடாவின்
வாக்காளர்களுக்கு உறுதியளிக்கின்றனர். பென்சில் மூலம் வாக்குச்சீட்டில் இடப்படும் அடையாளங்களை எளிதில் மாற்ற முடியும் என்று, சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் அண்மையில் பரவின, இதனையடுத்தே இந்த மறுப்பு அறிக்கை வெளிவந்துள்ளது.
கனேடிய சட்டப்படி, வாக்களிப்பதற்கு வரும் மக்களுக்கு வாக்குச் சாவடிகளில் பென்சில்கள் வழங்கப்பட வேண்டும். என்றாலும், வாக்காளர்கள் தங்கள் சொந்த பேனாக்களைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுவார்கள் என்பது சுட்டிக்காட்டத் தக்கது.
