உள்ளூர் பொருட்களை வாங்குமாறு கியூபெக் மாகாண அரசு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.
அமெரிக்காவுடனான தொடர்ச்சியான வர்த்தகப் பிரச்சினைகள் காரணமாக இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
கியூபெக் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது, கியூபெக் கலாச்சாரத்தை ரசிப்பது மற்றும் அமெரிக்கா
செல்வதற்குப் பதிலாக கியூபெக் மாகாணத்திற்குள் பயணம் செய்வது முதலான செயற்பாடுகள்
கியூபெக்கில் ஊக்கப்படுத்தப் படுகின்றன.
