Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வள்ளிபுனத்தில் போதையில் பெண்களைத் தாக்கிய இளைஞர் குழுவை உடனடியாக கைது செய்க – ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

ஏப்ரல் 6, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் கடந்த 02.04.2025 அன்று அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர் குழுவினர் மதுபோதையில் அப்பகுதிப் பெண்கள் சிலரைத் தாக்கியுள்ளனர்.

இந் நிலையில் இன்றையதினம் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நிலமைகளைக் கேட்டறிந்ததுடன், உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலயம் சென்று குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அந்த இளைஞர்குழுவை கைது செய்யுமாறு புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வலியுறுத்தியிருந்தார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில், சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர் குழுவால் தொடர்ந்தும் அப்பகுதிமக்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 02.04.2025அன்று மாலைவேளை வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் அப்பகுதியைச்சேர்ந்த மகளிர் சுயசேமிப்பு கொத்தணி குழு ஒன்றினுடைய கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவ்வீட்டின் அருகே செல்லும் வீதியால் வருகைதந்த, அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் குறித்த இளைஞர்குழு, கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண்களை தகாத வார்த்தையால் திட்டியதுடன், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பெண்கள் சிலரை கடுமையாகத் தாக்கியுமுள்ளனர்.

அதிலும் குறிப்பாக தலைக்கவசத்தினால் ஒரு பெண்ணின் தலைப்பகுதி மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் இந்த விடயம் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்திய தலைக்கவசமும் இதன்போது காண்பிக்கப்பட்டது.

இந் நிலையில் இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கமைய, தாக்குதலுடன் தொடர்புடைய நால்வரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் தாக்குதலுடன் தொடர்புடைய ஏனைய மூவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலமைகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் சென்று தாக்குதலுடன் தொடர்புடைய ஏனைய மூவரையும் கைது செய்யுமாறு புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வலியுறுத்தியதுடன், அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் நிலைமையினைக் கட்டுப்படுத்துமாறும் வலியுறுத்தினார்.

இந் நிலையில் இத்தாக்குதல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஏனைய மூவரையும் கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் தெரிவித்ததுடன், அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாட்டாளர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் நிலமைகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சன்ரைசர்ஸ் அணி …
அடுத்த செய்தி இந்தியா, இலங்கை இடையேயான பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் துரோகம் – வைகோ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அவதானம் மக்களே – வேகமாக பரவும் எய்ட்ஸ்

டிசம்பர் 16, 2025
இலங்கை

நாகர்கோவில் மாணவர்கள் படுகொலை நினைவேந்தலுக்கு ஊடகங்களுக்கு தடை விதித்த அதிபர்!

செப்டம்பர் 23, 2025
இலங்கை

இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிரிமெட்டியாவ குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

மே 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?