அமெரிக்க வரிவிதிப்பினால் கனேடிய வணிகச் சமூகத்திற்கு ஆழமான பாதிப்பு ஏற்படக்கூடும் என சுதந்திர வணிகத்துக்கான
கனேடிய சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அவ்வமைப்பின் தலைவரான Dan Kelly இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கனடாவின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்களுக்கு, அமெரிக்க அரசாங்கத்தின் வரிவிதிப்புக் கொள்கையானது
பிரம்மாண்டமான பாதிப்பை ஏற்படுத்தப் போவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
சுதந்திர வணிகத்துக்கான கனேடிய சம்மேளனத்தின் உறுப்பினர்களாக உள்ள கனேடிய நிறுவனங்களில் 50 சதவீதமானவை, அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு
இறக்குமதிகளைச் செய்பவை என்று தெரிவித்த Dan Kelly, 16 சதவீதமான உறுப்பினர் நிறுவனங்களே அமெரிக்காவுக்கு
ஏற்றுமதியைச் செய்வதாகக் கூறியுள்ளார்.