Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் 30 வருடங்களாக சுகாதாரத்துறையில் ஆளணி மறுசீரமைப்பு நடைபெறவில்லை…

மார்ச் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

பருத்தித்துறை ஆதார மருத்துவமனை, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை, மாங்குளம் ஆதார மருத்துவமனை, வவுனியா மாவட்ட மருத்துவமனை ஆகியனவற்றில் விசேட சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை கடந்த காலங்களில் திறந்து வைக்கப்பட்டாலும், அவற்றின் தேவைப்பாடுகள் முழுமைப்படுத்தப்படாமையால் வினைத்திறனுடன் செயற்பட முடியாத நிலைமை காணப்படுகின்றது.

ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சவாலாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவற்றை எவ்வாறு தீர்த்து இவற்றை இயங்க வைக்கலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

அதேபோன்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

3 தசாப்தங்களாக வடக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையில் ஆளணி மறுசீரமைப்பு நடைபெறவில்லை என்றும், இதனைக் கருத்தில்கொண்டு ஆளணி மறுசீரமைப்பு, வெற்றிடமாகவுள்ள ஆளணிகளை நிரப்புவதற்கு மத்திய சுகாதார அமைச்சைக் கோருவதற்கும் இந்தக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்புக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தை இயங்கச் செய்வதற்கான நிதிக்கான வாய்ப்புக்களை எவ்வாறு உருவாக்கிக்கொள்வது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், வவுனியா மற்றும் மாங்குளம் மருத்துவமனைகளில் பொறுப்பு மருத்துவ அத்தியட்சகர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடாதிபதி, முன்னாள் மருத்துவபீடாதிபதி, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி வவுனியாவில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி முதலாவது வேட்புமனுவை தாக்கல் செய்தது…
அடுத்த செய்தி பா.உ. அர்ச்சுனா தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு – மக்கள் அசௌகரியம்

பிப்ரவரி 17, 2026
இலங்கை

மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொத்மலையில் சிக்கிய 30 பேர் பாதுகாப்பாக மீட்டெடுப்பு!

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் தடம்புரண்ட வாகனம்!

அக்டோபர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?