எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு நேற்றுமுதல் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் வவுனியா வடக்கு பிரதேசசபையில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அகிலஇலங்கை தமிழ்காங்கிரஸ்கட்சி இன்று தாக்கல் செய்தது.
கட்சியின் முக்கியஸ்தர் எஸ்.தவபாலன் தலைமையில், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் சகிதம் தமது வேட்புமனுவை இன்று மாலை கையளித்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடவுள்ளதாக தமிழ்காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்று மாலைவரை வவுனியா மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சி மாத்திரமே தமது வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.