கற்பூரவள்ளி மிகச் சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி ஆகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. இதற்கு ஓமவள்ளி என்ற பெயரும் உண்டு.
இது நமது முன்னோர்களால் பாரம்பரியமாகவே பயன்படுத்தப்பட்டு வரும் சிறந்த மூலிகைகளில் ஒன்று.
கற்பூரவள்ளியின் இலைகள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாகும்.
இந்த இலைச் சாற்றை சர்க்கரையுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வர இருமல் தீரும்.
கற்பூரவள்ளியில் விட்டமின் A மற்றும் C உள்ளதால், தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கு நல்ல ஒரு தீர்வாகவும் கண்பார்வையை மேம்படுத்தவும் உதவுகின்றது.
மூட்டுவலி, பற்சிதைவு, ஈறுகள் சார்ந்த பிரச்சினைகள், இதயப் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு கற்பூரவள்ளி சிறந்த தீர்வாகும்.
கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிட்டால் உணவுச் சமிபாடுச் சிக்கல் நீங்கும்.
அத்துடன், தசைகள் சுருங்குவதைத் தடுக்கும்.