Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்திய நிதியுதவி

செப்டம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக பெங்களூரிலிருந்து வருகை தந்துள்ள இந்தியாவின் மீன்பிடித்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மீன்வளத்துக்கான மத்திய கடலோர பொறியியல் நிறுவனத்தினர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளியும் இணைந்து கொண்டார்.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் இந்தியத் தூதுக்குழுவினரை வரவேற்ற ஆளுநர், இந்திய அரசாங்கம் வழங்கவுள்ள உதவிக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் முல்லைத்தீவுக்கு மே மாதம் வருகை தந்திருந்தபோது பருத்தித்துறை துறைமுகம் இந்திய நிதியுதவியில் அபிவிருத்தி செய்யப்படும் என்று உறுதியளித்ததை ஆளுநர் இங்கு நினைவுக்கூர்ந்தார்.

மேலும், பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் சுட்டிக்காட்டியதுடன், யாழ். மாவட்டச் செயலராக தான் பதவி வகித்த காலத்தில் குறித்த துறைமுகத்தை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்கு எடுத்த முயற்சிகள் இறுதியில் கைகூடாமல் போனமையையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

இம்முறை அவ்வாறான நிலைமை ஏற்படாது என நம்புவதாகத் தெரிவித்த ஆளுநர் இந்தத் திட்டமுன்னெடுப்புக்கான மாகாணத்தின் ஒத்துழைப்பு முழுமையாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

பருத்தித்துறை துறைமுகத்தை இந்தக் குழுவினர் நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை கடற்றொழில் அமைச்சரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பருத்தித்துறை துறைமுகத்துடன் தொடர்புடைய சமூக அமைப்புக்களின் கருத்துக்களை உள்வாங்கி எதிர்கால திட்டங்களை முன்னெடுக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், இந்தியத் தூதுக் குழுவினர், கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி அற்புதன் , மகேஸ்வரி , ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பி யினரே – முன்னாள் உறுப்பினர் தெரிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல்

ஏப்ரல் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு

ஜூலை 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெற்செய்கை

டிசம்பர் 13, 2025
இலங்கை

மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயதுடைய மீனவர்

ஆகஸ்ட் 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?