சீனாவின் மின்சார வாகனங்கள், இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது கடந்த ஒக்டோபர் (October) மாதம் கனடா வரிகளை விதித்ததைத் தொடர்ந்து பழிவாங்கும் விதமாக சீனாவும் சில கனேடிய பண்ணை மற்றும் உணவு இறக்குமதிகளுக்கு வரிகளை விதிக்கப்போவதாக இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.
மார்ச்
இந்த புதிய வரிகள் மார்ச் 20 (March ) முதல் அமுலுக்கு வரும் எனவும் இவற்றுள் கனடாவின் rapeseed oil, எண்ணெய், எண்ணெய் Cake மற்றும் பட்டாணி மீது 100% வரியும் பன்றி இறைச்சி மற்றும் நீர்வாழ் உற்பத்திகள் மீது 25% வரியும் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
சீனாவின் தொடர்ச்சியான எதிர்ப்புகளையும் மீறி எந்த விசாரனையும் இல்லாது கனடா ஒருதலைப்பட்சமாக சீனா மீது வரி விதிக்கப்பட்டதை, சீனா-கனடா பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை கனடா குறைத்து மதிப்பிட்டதாக சீனாவின் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில சீன தயாரிப்புகளுக்கு எதிரான கனடாவின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சாதாரண வர்த்தக ஒழுங்கை சீர்குலைத்ததன் விளைவாகவும், சீன நிறுவனங்களின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களுக்கு தீங்கு விளைவித்ததைக்கண்டறிந்ததன் அடிப்படையிலுமே சீனா, கனடா மீது பழிவாங்கும் வரிகளை விதிக்கும் முடிவுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.