அமெரிக்காவில் 80,000 அரசு பணியிடங்களை இரத்து செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றவுடன் ‘அரசு செயல் திறன்’ எனும் புதிய துறை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் பதவி வகிக்கிறார்.
இத்துறையின் த பரிந்துரைகளின்படி அமெரிக்க அரசின் செலவினங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கான துறையில் 80,000 அரசு பணியிடங்களை இரத்து செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.