யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தையிட்டி கிராமத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிக்குள் அமைக்கப்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அதற்கெதிராக அப்பகுதி மக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது
இந்த நிலையில் திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பல கேள்விகளை எழுப்பியபோதும் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக ஒருவார காலஅவகாசம் வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தார்
காணி அமைச்சு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் தகவல்கள் பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. அதன்பின்னர் முழுமையான பதிலை வழங்குகின்றேன் என்றார்.