இலங்கையில் தற்போது கனமழை பெய்து வருவதால் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, பதுளை மாவட்டத்தில் கந்தகெட்டிய, பசறை, ஹாலிஎல, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, ஊவா பரணகம மற்றும் சொரணதொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.