வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஒண்டாரியோ மாகாண தேர்தலில் டக் போர்ட் தலைமையிலான ப்ரொஃரெஸ்ஸிவ் கான்செர்வ்டிவ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.
ஒண்டாரியோ மாகாணத்தில் டக் போர்ட் பெறும் மூன்றாவது தொடர் பெரும்பான்மை வெற்றி இதுவாகும்.
ப்ரொஃரெஸ்ஸிவ் கான்செர்வ்டிவ் e கட்சி 80 ஆசனங்களையும், புதிய ஜனநாயக்கட்சி 27 ஆசனங்களையும், லிபெரல் கட்சி 14 ஆசனங்களையும் வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலில் பசுமை கட்சி இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றதுடன், ஒரு தொகுதியில் சுயேச்சை உறுப்பினர் வெற்றி பெற்றார்.
63 ஆசனங்களை வெற்றி பெற்றால் பெரும்பான்மை என்ற நிலையில் ஒண்டாரியோ பழமைவாத கட்சி கட்சி 80 ஆசனங்களை வெற்றி பெற்று, மீண்டும் பெரும்பான்மை அரசை அமைக்கிறது.
27 ஆசனங்களை வெற்றி பெற்ற புதிய ஜனநாயக்கட்சி மீண்டும் Ontario மாகாண சபையில் எதிர்க் கட்சியாகிறது.
லிபெரல் கட்சியின் தலைவர் பொன்னி கிராம்பில் போட்டியிட்ட மிஸ்ஸிஸ்சுக கிழக்கு -ஸூக்ஸ்வில்லே தொகுதியில் தோல்வி அடைந்தார்.
ஆனால் 14 ஆசனங்களை வெற்றி பெற்ற லிபெரல் கட்சி கடந்த முறை இழந்த உத்தியோகபூர்வ கட்சி என்ற நிலைமை மீண்டும் பெறுகிறது.
இந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து தமிழ் வேட்பாளர்களில் இருவர் வெற்றி பெற்றனர்.
ஸ்கேர்போரூக்ஹ் – ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் 16357 வாக்குகளை பெற்று வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
மார்க்கம் -தொர்ன்ஹில் l தொகுதியில் போட்டியிட்ட லோகன் கணபதி 14287 வாக்குகளை பெற்று வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் இருவரும் வெற்றி பெறும் மூன்றாவது தேர்தல் இதுவாகும்.
27 இடங்களைப் பெற்றதால், அவர்கள் மீண்டும் ஒன்டாரியோவில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளனர். லிபரல் கட்சி 14 இடங்களை வென்று 2022 தேர்தலைவிட மேம்பட்ட நிலையை அடைந்திருந்தாலும், கட்சித் தலைவர் பானி க்ராம்பி (Bonnie Crombie) தனது தொகுதியில் தோல்வி அடைந்தார்.
வெற்றிக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்த டக் ஃபோர்டு, “ஒன்டாரியோவை பாதுகாக்க ஒரு வலுவான, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது பெரும்பான்மை ஆட்சியை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்,” என உரையாற்றினார்.
அவர் தனது ஆதரவாளர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்ததுடன், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.