Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ். செம்மணி பகுதியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கானர் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை.

பிப்ரவரி 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான பகுதியை ஸ்கானர் இயந்திர உதவியுடன் முழுமையாக பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டன.

அதனை அடுத்து அத்திவாரம் வெட்டும் பணியை ஒப்பந்தக்காரர் நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் குறித்த பகுதியில் மேலும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் இருக்கலாம் என்றும், அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அரியாலை பகுதியை சேர்ந்த இருவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் குறித்த விடயத்தினை யாழ் . நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை நீதவான் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அதன் போது, சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸார், தடயவியல் பொலிஸார், நல்லூர் பிரதேச செயலர் ஆகியோரும் சம்பவ இடத்தில் பிரசன்னம் ஆகியிருந்தனர்.

குறித்த பகுதிகளை ஆராய்ந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதவான், மீட்கப்பட்ட எலும்பு துண்டுகளை பகுப்பாய்வுக்கு அனுப்புமாறும் , ஏனைய பகுதிகளை ஸ்கானர் இயந்திர உதவியுடன் முழுமையாக பரிசோதனை செய்யவும் நீதவான் கட்டளையிட்டார்.

முந்தைய செய்தி வடமாகாணத்தில் திறமை மிக்க வீரர்களை தேசிய மட்ட அணிகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜெகதீஸ்வரன் எம்.பி
அடுத்த செய்தி சிறந்த உற்பத்தி நடைமுறைக்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட முல்லை மதிமிக்சர் நிறுவனத்தின் உரிமையாளர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மீனவ சமூகத்திற்கு அவசர விபத்து காப்புறுதி திட்டம் அறிமுகம்!

ஜூலை 30, 2025
இலங்கை

பொருளாதார ஈட்டலை அழித்து மக்களை வீதியில் விடுவதா “கிளின் சிறீலங்கா”

பிப்ரவரி 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டியில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி…

மே 12, 2025
இலங்கை

ஆவரங்காலில் விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?