இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று நடைபெற்றது. தமிழரசு கட்சியின் பதில் பொது செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த ப.சத்தியலிங்கம் சுகவீனம் காரணமாக தொடர்ந்த்தும் இப்பதவியில் நீடிக்க முடியாது என அறிவித்துள்ளார்.
இதன்படி அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக சிரேஷ்ட துணை செயலாளரான எம்.ஏ சுமந்திரனை நியமிப்பது குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொது செயலாளராக எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.