மலேசியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேராக் மாநிலத்தில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 42 மாணவர்கள் பேருந்தில் பயணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பேராக் மாநிலத்தையும் கிளந்தான் மாநிலத்தையும் இணைக்கும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது மற்றுமொரு வாகனத்துடன் மோதிய காரணத்தால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
