இன்றைய காலச் சூழல் யாருக்கானதாக இருக்கப்போகின்றது என்பது முக்கியமல்ல. அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரின் வேட்பாளர் அமிர்தலிங்கம் தவதீசன் தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டி.பியின் வேட்பாளர்களான தேவதாசன் கமலதாசன் மற்றும் அமிர்தலிங்கம் தவதீசன், ஆகியோர் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.
ஈ.பி.டி.பிக்கு யாழ் முஸ்லிம் மக்கள் என்றும் நன்றிக்கடன்பட்டவர்களாகவே இருக்கின்றனர் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர வேட்பாளர் B.S.M சரபுல் அனாம்,
அந்த நன்றிக்கடனின் பிரதியீடாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெறச் செய்து வலுப்படுத்துவது அவசியம்.
அதற்காக யாழ் முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.