இலங்கை இராணுவம் மேஜர் பதவிக்குக் கீழே உள்ள அனைத்துப் பணியாளர்களும் தங்கள் கடவுச்சீட்டுகளை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் வருண கமகே கூறுகையில், இந்த முடிவு நிர்வாக நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், வெளிநாட்டு பயிற்சி மற்றும் அலுவலக விடயங்களுக்கான கடவுச்சீட்டுகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கான காரணம் வெளியான நிலையில், இந்த நடவடிக்கை அனைத்து படைப்பிரிவுகளிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்குப் பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.