பிரதமர் ஹரிணி அமரசூரிய கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டார்.
பிள்ளையார் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பிரதமர் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தி திட்டம் தொடர்பாகவும், மக்கள் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
குறித்த விடயங்களுக்கு உரிய தீர்வினை உரிய காலத்தில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், நாளைய தினம் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட பாதீடு வெளிவரவுள்ளது. அதில் ஏழை மக்களுக்கு நன்மை தரக்கூடிய வகையிலான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.