Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ் . பல்கலை கலைப்பீடாதிபதிக்கு எதிரான வழக்கு – வகுப்புத்தடை மீள பெறப்பட்டது.

பிப்ரவரி 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை மீள பெறப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவனுக்கு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நடைபெற்ற மூன்று வெவ்வேறு விடயங்களில் 09 மாணவர்களுக்கு வகுப்புத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறித்த வகுப்புத்தடை குறித்து, மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக அண்மைக்காலம் வரை செயலாற்றிய சட்ட பீட மாணவனான சி.சிவகஜனால் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது.

அதனை அடுத்து தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு சிவகஜன் செவ்வி வழங்கினார் என பேராசிரியர் ரகுராம் துணைவேந்தரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

பேராசிரியர் எஸ்.ரகுராம் கலைப்பீடாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த மறுநாளே குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சட்டத்துறை மாணவன் சிவகஜனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.

இந்த வகுப்புத் தடை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதி எஸ்.ரகுராம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விதிக்கப்பட்டுள்ளது. என்று துணைவேந்தரால் மாணவனுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகுப்புத் தடையைச் சவாலுக்குட்படுத்தி யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலை பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு சட்டத்துறை மாணவன் சிவகஜனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலையே மாணவன் மீதான வகுப்புத்தடை நீக்கப்பட்டுள்ளதாக மாணவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புத்தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளை மீறி மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவும் , இழப்பீடு கோரியும் வழக்கினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி புனித லூர்து அன்னை திருத்தலத் திருவிழாவின் தேர்ப்பவணி.
அடுத்த செய்தி யாழில். காணி விடுவிப்பு தொடர்பில் பிரதமரிடம் கேட்டதால் பரபரப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

குறிகட்டுவான் படகு விபத்து – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஆகஸ்ட் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை குறித்து வெளியான அறிவிப்பு !

மே 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் களைகட்டும் நத்தார் வியாபாரம்!

டிசம்பர் 24, 2025
இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் இரணைமடுக்குளத்திற்கு விஜயம்!

செப்டம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?