நெல் கிலோ ஒன்றுக்கான அதிகபட்ச விலையை அரசாங்கம் சற்று முன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்முதல் செய்யும் விலையை அறிவிப்பதற்காக இன்று (05) ஊடக சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அதற்காக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோர் இணைந்து கொண்டனர்.
அதன்படி,
நாட்டு அரிசி கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 120 ரூபாய் எனவும்
சம்பா கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 125 ரூபாய் எனவும்
கீரி சம்பா கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 132 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அரிசியின்விலையையும் விவசாயிகளின் உற்பத்தி செலவுகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.