ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கு இராணுவ படைக்கு சொந்தமான மூன்று ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் போலியானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்திற்கு விமானப்படை விமானங்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது. அதன்படி, ஜனாதிபதி தனது காரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதாகப் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.