Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அமெரிக்காவில் விமானமும் ஹெலிகாப்டரும்நேருக்கு நேர் மோதிய விபத்து.

ஜனவரி 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் விச்சிட்டாவில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று தலைநகர் வாஷிங்டனில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.

அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான அந்த விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் என 64 பேர் இருந்தனர். விமானம் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தது. விமானம் போடோமேக் நதியின் மேல் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க ராணுவத்தின் பிளாக்ஹாக் ஹெலிகாப்டர் அருகே பறந்து கொண் டிருந்தது.

அப்போது ஹெலிகாப்டருடன் பயணிகள் விமானம் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தீப்பிழம்பு ஏற்பட்டு பயணிகள் விமானம் ஆற்றில் விழுந்தது. இதையடுத்து மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். அமெரிக்க பாதுகாப்புப் படை மற்றும் தீயணைப்புப் படையினர் ஆற்றில் தேடுதல் பணியை தொடங்கினர்.

படகுகளில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட னர். நீச்சல் வீரர்களும் ஆற்றுக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆம்புலனஸ்சுகள், மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 64 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ராணுவ ஹெலிகாப்டரில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

விபத்தை தொடர்ந்து ரீகன் விமான நிலையம் மூடப்பட்டது. அங்கு அனைத்து விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல்களை நிறுத்தி வைத்துள்ளதாக விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார்.

விபத்து குறித்த தகவல்கள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, விமான விபத்து குறித்து எனக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை கண்காணித்து வருகிறேன் என்றார்.

மேலும், விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது. ஹெலிகாப்டருடன் விமானம் நடுவானில் மோதிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

முந்தைய செய்தி உழவு இயந்திரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – குடும்பஸ்தர் பலி!
அடுத்த செய்தி சுவசெரிய சேவைக்காக புதிய வாகனங்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

கலிபோர்னியாவில் விமான விபத்து – விமானி பலி

மே 4, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பெண்களை கொன்று பன்றிகளுக்கு இரையாக்கிய பண்ணையாளர்!

அக்டோபர் 5, 2024
உலகம்

இஸ்ரேலால் அங்கீகரிக்கப்பட்டுள்ள சோமாலிலாந்து

டிசம்பர் 29, 2025
உலகம்

உக்ரைன் போரில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் ரஷ்யா!

ஜூலை 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?