Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் செயற்படுங்கள் – நா.வேதநாயகன்

ஜனவரி 22, 2025
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும் எனவும், இந்த ஆண்டுக்குரிய திட்டங்கள் அனைத்தும் ஒக்டோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன் கிழமை இடம்பெற்றது.

அதில் பிரதம செயலாளர், வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள் பங்கேற்றனர்.

தேசிய நிதி ஆணைக்குழுவால் 2025ஆம் ஆண்டுக்கான மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு, வாக்குப்பணக்கணக்கு (vote on account) அடிப்படையிலும், வருடாந்த வரவு – செலவுத் திட்டத்தின் அடிப்படையிலும் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட விசேட அபிவிருத்தி நன்கொடை (PSDG) நிதியாக 6,025 மில்லியன் ரூபாவும் அதில் வாக்குப்பணக்கணக்காக 2,410 மில்லியன் ரூபாவும், பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) நிதியாக 575 மில்லியன் ரூபாவும் அதில் வாக்குப்பணக்கணக்காக 230 மில்லியன் ரூபாவும், கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் பொதுக்கல்வி நவீனமயமாக்கல் திட்டத்துக்கு (GEM) ஆண்டுக்குரிய மொத்த நிதியான 220 மில்லியன் ரூபாவும் வாக்குப்பணக்கணக்கிலேயே வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்துக்கு 360 மில்லியன் ரூபாவும் வாக்குப்பணக்கணக்கிலேயே வழங்கப்பட்டுள்ளது.

மாகாணசபையால் பராமரிக்கப்படும் அதனது சொத்துக்களுக்காக 2,585 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் வாக்குப்பணக்கணக்கில் 820 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல் பணிப்பாளர் எம்.கிருபாசுதன் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் தயாரிக்கும்போது தேசிய நிதி ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை கவனத்தில் கொள்ளுமாறு வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு ஆரம்பித்த தொடர் வேலைகளை முடிவுறுத்தல் மற்றும் முடிவுற்ற வேலைகளுக்கான கைவசம் உள்ள பற்றுச்சீட்டுக்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதை முன்னுரிமைப்படுத்துமாறு தேசிய நிதி ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளதையும் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டு மாகாணத்தின் வேலைத் திட்டங்களை உரிய காலப் பகுதிக்குள் முடிவுறுத்துவதற்கு ஏதுவாக கட்டடங்கள் திணைக்களத்துக்கு முற்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரதம செயலர், ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.

கடந்த ஆண்டு வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது. இதன்போது கடந்த ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டின் 60 சதவீதமே கட்டுநிதியாக வழங்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டதாகவும் ஓகஸ்ட் மாதமளவிலேயே அது 80 சதவீதமாக திடீரென அதிகரிக்கப்பட்டமையால் சில வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை என அதிகாரிகளால் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த ஆண்டு அவ்வாறு இல்லாமல் திட்டங்களுக்கான அனுமதிகளை முற்கூட்டியே பெற்று விரைவாக அதனைச் செயற்படுத்தி முடிக்கவேண்டும் என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்ட ஆளுநர் ஒக்டோபர் மாதத்துக்கு அவை நிறைவு செய்யப்படுவதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

சில திட்டங்கள் பெயரளவில் உள்வாங்கப்படுவதை தவிர்த்து நடைமுறைப்படுத்தக்கூடிய, மக்களுக்கு பயனளிக்கக் கூடிய திட்டங்களை தயாரிக்குமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கினார். மாகாண நிர்வாகத்தால் பராமரிக்க முடியாத கட்டுமானங்கள், திட்டங்களை தயாரிப்பதைவிடுத்து அதை பொதுமக்கள் – தனியார் கூட்டு இணைவு மூலம் செயற்படுத்தக் கூடியதாக மாற்றியமைக்குமாறும் ஆளுநர் அறிவுரை வழங்கினார்.

விவசாயத்துறையைப் பொறுத்தவரையில் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் வழங்குவது மாத்திரமல்லாது அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்பையும், சந்தை விலையையும் கருத்திலெடுத்துச் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

அதேவேளை, குத்தகைக்கு வயல் நிலங்களை வழங்கிய காணி உரிமையாளர்கள் உரமானியம் மற்றும் பயிரழிவு இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் வடக்கு விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன் சுட்டிக்காட்டினார்.

அதனை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், கடந்த காலங்களில் தவறுகள் நடந்திருந்தால் அதைச்சொல்லிக்கொண்டு தொடர்ந்து செல்ல அனுமதிக்க முடியாது எனவும் உடனடியாக இந்த அரசாங்கத்தின் காலத்தில் அவை களையப்படவேண்டும் எனவும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கு மாகாணத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

முந்தைய செய்தி இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.
அடுத்த செய்தி வாழைச்சேனையில் அண்ணன் மீது தம்பி கத்தி குத்து தாக்குதல்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலையில் தொடரும் போராட்டம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மட்டக்களப்பு பகுதியில் உணவகமொன்றில் தீ பரவல்!

அக்டோபர் 13, 2025
இலங்கை

உலகளவில் 80 வீத இதய நோய் உயிரிழப்புகள் தடுக்கக்கூடியவை என தெரிவிப்பு!

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருள் பாவனை குறித்து இளையோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – ஜாட்சன் பிகிராடோ

ஏப்ரல் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?