வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் உடன்பிறந்த சகோதரனான அண்ணன் வீட்டிற்கு சென்று அவர் மீது இன்று புதன்கிழமை (22) காலையில் தம்பி கத்திக் குத்து தாக்குதல் மேற்கொண்டதில் அண்ணன் உயிரிழந்ததையடுத்து தம்பியர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
பிறைந்துறைச்சேனை சாதுலியா பாடசாலை வீதியைச் சேர்ந்த 43வயதுடைய சீனி முகமது முசமில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இருசகோதர்களுக்கிடையே ஏற்பட்ட பணம் கொடுக்கல் வாங்கல் முரண்பாட்டையடுத்து சகோரனின் வீட்டிற்கு சம்பவதினமான இன்று காலை 9.30 மணிக்கு சென்ற தம்பியார் அண்ணன் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்ததையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில் தாக்குதலை நடாத்திய தம்பியார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.