Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் வெள்ள அபாயத்தில் பல கிராமங்கள் – அனர்த்த முகாமைப் பிரிவு எச்சரிக்கை.

ஜனவரி 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை அண்டிய பல கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் நேற்று (20) தென்னிலங்கைப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக முக்கியமான பெரிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் மல்வத்து ஓயா எனப்படும் அருவியாற்றினை அண்டிய பகுதிகளாக உள்ள நானாட்டான் மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மடுக்கரை, இராசமடு, அச்சங்குளம் போன்ற கிராமத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது அருவி ஆற்றில் 13.2 அடி நீர் வரத்து உள்ளது. இந்த நீர்வரத்து அதிகமானால் மக்கள் கட்டாயம் இடம் பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டால் நானாட்டான் டிலாசால் கல்லூரி மற்றும் மோட்டக்கடை சிவராஜா வித்தியாலயங்களில் தங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக நானாட்டான் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

மேலும் அருவி ஆற்றில் நீர்வரத்து அதிகமாகி வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் அருவி ஆற்றில் மீன்பிடியில் ஈடுபடும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் 400 ஏக்கருக்கு மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் அழிவு!
அடுத்த செய்தி அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வற்றாப்பளையில் சிறப்பாக இடம்பெற்ற வீதியோர மரநடுகை நிகழ்வு

ஏப்ரல் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரை பகுதியை புகைப்பட குற்றச்சாட்டில் கைதான இளைஞர்களுக்கு பிணை

மே 31, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தபால் சேவை மூலம் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்க திட்டம்!

நவம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் களைகட்டும் அட்சய திருதியை வியாபாரம்

ஏப்ரல் 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?