மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளுடன் சில இயற்கையான உபாயங்கள் மூலமாகவும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். அவற்றில் ஒன்று கற்றாழை.
சமீப காலங்களில் பல வித வாழ்க்கை முறை நோய்கள் மக்களை அதிகமாக ஆட்கொள்கின்றன. அவற்றில் நீரிழிவு நோய் மிக முக்கியமானதாக உள்ளது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் மிக அவசியமாகும்.
மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளுடன் சில இயற்கையான உபாயங்கள் மூலமாகவும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். அவற்றில் ஒன்று கற்றாழை. கற்றாழை சாறு குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த செடியை வீட்டிலேயே வளர்க்கலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு இதில் இன்னும் பல நன்மைகளும் உள்ளன. பலர் சருமம் மற்றும் கூந்தலின் அழகை அதிகரிக்க கற்றாழையை பயன்படுத்துகிறார்கள். எனினும், அதிகமானோர் அதன் சாற்றை எடுத்து குடிப்பதில்லை. கற்றாழை சாறு குடிப்பதால் சுகர் நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
முதலில், கற்றாழை இலையை உரித்து, அதிலிருந்து ஜெல்லை எடுத்து, நன்றாக அழுத்தி நசுக்கி கிரஷ் செய்து கலக்கிக்கொள்ளவும். இப்போது அதில் கருப்பு உப்பு, எலுமிச்சை மற்றும் கருப்பு மிளகு கலந்து சாறு தயார் செய்து குடிக்கவும். இதனை தொடர்ந்து குடிப்பதால் பல வகையான ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
நீரிழிவு நோயில் நன்மை பயக்கும் (Diabetes)
நீரிழிவு நோயாளிகள் மற்றும் ப்ரீ டயபெடிக் நோயாளிகள் கற்றாழை சாற்றை குடிக்கலாம். இந்த பானம் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதை குடிக்கத் தொடங்கும் முன் மருத்துவரின் ஆலோசனையை பெற்று அதன் பிறகு அதை குடிக்க அறிவுறுத்தப்படுகின்றது.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது (Heart Health)
நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் அபாயம் சற்று அதிகமாக இருக்கும். கற்றாழை சாறு குடிப்பது இதற்கும் நன்மை பயக்கும். இதயத்தை பாதுகாக்க அவர்கள் கற்றாழை சாற்றை உட்கொள்ளலாம். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் மாரடைப்பு போன்ற கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும் பல ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன.
வயிறு சுத்தமாக இருக்கும் (Clean Stomach)
நீரிழிவு நோயாளிகள் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, கற்றாழை சாற்றை தொடர்ந்து குடிக்கலாம். இதன் மூலம் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
உடலில் உள்ள நச்சுகள் நீங்கும் (Detox)
உடலில் அதிக அளவில் நச்சுகள் உருவானால், அது பல நோய்களை உண்டாக்கும். ஆகையால், நச்சுகளை அகற்றுவது மிக முக்கியம். கற்றாழை சாறு உடலை உட்புறமாக சுத்தம் செய்யும். தினமும் ஒரு டம்ளர் கற்றாழை சாறு குடித்தால் போதும், உடலில் உள்ள நச்சுகளை எளிதாக நீக்கலாம்.