இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களின் முடிவில் 0-1 என பின்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. டி20 தொடரை அபாரமாக கைப்பற்றிய இந்தியா ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்ததற்கு ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோரின் பேட்டிங் வரிசையை மாற்றியது மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும், இத்தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வெடுக்க விரும்பினர். ஆனால் கம்பீரின் முடிவால் விராட் மற்றும் ரோகித் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றனர்.
இந்நிலையில், இத்தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு பயிற்சியாளர் கம்பீர் ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.