பாணந்துறை, வேகட பகுதியில் உந்துருளியில் பிரவேசித்த நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
