Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பூநகரியில் சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு தண்டம்!

ஆகஸ்ட் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பூநகரி பொது சுகாதார பிரிவில் உள்ள உணவகங்கள் மீது பொதுசுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முழங்காவில் பொது சுகாதார பிரிவில் உள்ள
முழங்காவில் மற்றும் நாச்சிக்குடா பகுதியிலுள்ள 4 உணவகங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனை ஒன்று கடந்த 04.08.2025 அன்று மேற்காெள்ளப்பட்டிருந்தது.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற சுகாதார குறைபாடுகளுடன் மற்றும் உணவு கையாளும் நிலையத்தின் கழிவு நீரினை ஒழுங்குமுறையில் அகற்றாது உணவு மாசடையும் வகையில் திறந்த வெளியில் அகற்றியமை , உயர்ந்த மட்ட சுத்தத்தைப் பேணாமல் அதாவது ஏப்ரன், தொப்பி அணியாமல் உணவினைக் கையாண்டமை சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை தொற்று ஏற்படும் வகையில் ஒன்றாக களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, உணவுப் பொருட்களை இலையான் மொய்க்கும் வண்ணம் திறந்த நிலையில் விற்பனைக்கு வெளிக்காட்டி வைத்திருந்தமை, மூடியில்லாத குப்பைத்தொட்டியினை சமையலறை, றொட்டி போடும் இடங்களில் வைத்திருந்தமை, குளிர்சாதனப் பெட்டியில் சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை தொற்று ஏற்படும் வகையில் ஒன்றாக களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை போன்ற பல்வேறு காரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டு உணவு பொருட்கள் அழிப்பு செய்யப்பட்டதுடன் நேற்றையதினம் கிளிநொச்சி நீதிமன்றில் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது கிளிநொச்சி நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டதுடன் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவக உரிமையாளர்கள் குற்றவாளிகளாக இனங்கண்டு மொத்தமாக 150,000 ரூபா தண்டம் விதித்ததுடன், கடை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

மேற்பார்வைப் பொதுசுகாதார பரிசோதகர் றெணால்ட், பொது சுகாதார பரிசோதகர்களான மு.ஜெனோயன், தளிர்ராஜ்
இ. தர்மிகன் ஆகியோரினால் இனங்காணப்பட்ட பிரச்சனைக்கு
முழங்காவில் பொது சுகாதார பரிசோதகர் இ. தர்மிகன்
அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஊர்வலம் முன்னெடுப்பு!
அடுத்த செய்தி யாழில் ஹெரோயினுடன் காரில் பயணித்த இளைஞன் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் உயிரிழப்பு!

நவம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

ஜூன் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அனுராதபுர போதனா வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவு பெற்றது ……

மார்ச் 13, 2025
இலங்கைவிசேட செய்திகள்

கல்வயல் கோவிலில் பிள்ளையாரின் வெள்ளி கவசத்தை திருடியவர் கைது!

நவம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?